ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!
மானாமதுரை ஆகாஷ் உயிரிழப்பு வழக்கு: 6 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் காவல் துறை காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆறு காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காவலர்கள் திலீபன், குகன், காளீஸ்வரன், பழனி, மகேந்திரன் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மானாமதுரையில் ஆகாஷ் காவல் துறை காவலில் இருந்தபோது உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணையின் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீதும் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2 தொழிலாளர்களை , வாளால் வெட்டிய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது ,கால் முறிவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஆகாஷ் ,காவல் நிலைய துன்புறுத்ததால் கடந்த மார்ச் 08 ம் தே தி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காவல்துறையினர் தாக்கியதில் தான் தன்னுடைய மகன் உயிரிழந்ததாக ஆகாசின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய ஆகாஷ் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட உடல் வாங்கப்படாமல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறாய்வு அரங்கிலே இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 110 நாட்களாக உடல் மருத்துவமனை பிணவறையிலேயே இருந்ததால் உடல் அழுகிப் போகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஆகாஷ் உடல் 110 நாட்களுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 100 நாள் நீதிப்போராட்டம் உச்சக்கட்டம்..! போராடிய ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது..!