எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தவெக அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாகவும், அந்தப் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர்கள் அனைவரும் தீவிரமாக வசூலில் இறங்கிவிட்டதாகவும், யார் யார் எங்கு வாங்குகிறார்கள் என்ற முழுப் பட்டியலும் தங்களது கைவசம் தயாராக உள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு மற்றும் கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்துக் கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சருக்குத் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த அவர், யாராக இருந்தாலும் உயிரைப் பறிப்பதற்கு முதலமைச்சர் என்ற அதிகாரத் தோரணையில் எந்த உரிமையும் கிடையாது என ஆவேசமாகச் சாடினார். யாராக இருந்தாலும் இந்தத் துப்பாக்கிச் சூடு கொடூரமானது என்றும், பாஜக சார்பில் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், தவெக அமைச்சர்கள் அனைவரும் தங்களது 'வேலைகளை' ஆரம்பித்துவிட்டதாகவும், அதாவது தீவிரமாக வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். அமைச்சர்கள் எங்கு வாங்குகிறார்கள் என்ற விவரங்கள் அனைத்தும் பாஜக வசம் உள்ளதாகவும், குறிப்பாகத் தமிழக முதலமைச்சரின் துறையில் நடைபெற்றுள்ள டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மிக விரைவில் ஆதாரங்களுடன் பொதுவெளியில் வெளியிடப் போவதாகவும் எச்சரித்தார். தவெக ஆட்சியின் 100 நாட்கள் என்பது மக்களுக்கு வேதனையான நாட்களாகவே அமைந்துள்ளது எனத் தெரிவித்த அவர், முறைகேடுகள் குறித்த விவரங்களை எப்போது வெளியிடுவோம் என்பதைத் திட்டவட்டமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் மின் பிரச்சனை.. தவிக்கும் தொழில்துறை..! முதல்வருக்கு நயினார் வைத்த முக்கிய கோரிக்கை..!!
இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!