“கீழடியை காணவே இந்தியா வந்தேன்...” - ஆஹோ ஓஹோ என புகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர்...!
உலகிலேயே கீழடி அருங்காட்சியகம் தனித்துவமானது - அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் ராய்ஸ் கருத்து
கீழடி அருங்காட்சியகம் உலகிலேயே தனித்துவமானது, பழம்பெருமையை பறைசாற்றுகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் மைக்கேல் ராய்ஸ் தெரிவித்துள்ளார்.\
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அருகில் வசிப்பவர் மைக்கேல்ராய்ஸ் ( 65, ) மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் அமெரிக்க பத்திரிக்கைகளில் அறிவியல் கண்டு பிடிப்புகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எழுதி வருகிறார். கீழடி அகழாய்வு மற்றும் அருங்காட்சியகம் குறித்து கேள்விப்பட்டவர் ஒரு மாத கால பயணமாக இந்தியா வந்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் பயணத்தை முடித்து விட்டு இன்று மதுரை வந்த அவர் மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு கட்டட தொகுதியையும் பார்வையிட்டு குறிப்பெடுத்து கொண்டார். அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அருகில் வைக்கப்பட்டுள்ள விளக்கம், மெகா சைஸ் டிவியில் ஒளிபரப்படும் அனிமேஷன் படங்கள் உள்ளிட்டவற்றை கண்டு வியந்தார்.
இதையும் படிங்க: ஐ.ஆர்.சி.டி.சி. மெகா ஆஃபர்... கம்மி காசில் திருப்பதி டு கன்னியாகுமரிக்கு ஆன்மீக சுற்றுலா...!
மைக்கேல் ராய்ஸ் கூறுகையில் " எங்கள் ஊரின் அருகில் ஆல்டுவாய்ஜார்ஜ் என்ற அருங்காட்சியகம் உள்ளது. அதில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தொடர்ச்சியாக எழுதி வந்தேன், கீழடி பற்றி கேள்விப்பட்டு இதனை காணவே இந்தியா வந்தேன், கீழடி அருங்காட்சியகம் உலகில் உள்ள மற்ற அருங்காட்சியகங்களை விட தனித்துவமானது., பொருட்களை காட்சிப்படுத்திய விதம், அவற்றின் விளக்கம், பொருட்களின் பாதுகாப்பு அம்சம், கட்டட தொகுதிகளின் அமைப்பு, சுற்றுப்புற சூழல் என அனைத்தும் மிகவும் வரவேற்பு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு கீழடி அருங்காட்சியம் முழு திருப்தியை அளித்துள்ளது. அருங்காட்சியகத்தின் கட்டிட கலை நுணுக்கம் மிகவும் கவர்ந்துள்ளது என்றார். கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் ஸ்ரீரங்கம், தஞ்சை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல உள்ளார்
இதையும் படிங்க: குடியுரிமை நோக்கத்துடன் விசா கேட்டால் விண்ணப்பங்கள் ரத்து! - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!