ரொம்ப டைம் எடுத்துக்காதீங்க!! சட்டுனு முடிச்சிருங்க! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!
போதைப்பொருள் பயங்கரவாதத்தை அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதைப்பொருள் பயங்கரவாதத்தை (நார்கோ-டெரரிசம்) முற்றிலுமாக ஒழிப்பதற்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஒரு வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல, நாட்டின் எதிர்கால சந்ததியை சீரழிக்கும் பெரிய சதி என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜனவரி 9, 2026) நடைபெற்ற நார்கோ-கோ-ஆர்டினேஷன் சென்டர் (NCORD) என்ற போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் 9வது உயர்மட்ட கூட்டத்தில் அமித் ஷா தலைமையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அமித் ஷா பேசியதாவது: “இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மத்திய அரசு தீவிரமாக தொடங்குகிறது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப் போகுது... 12 மாவட்டங்களில் மழை... வானிலை மையம் அலர்ட்...!
2026 மார்ச் 31 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2029 வரை) நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பிரசாரத்தை தொடங்குவோம். இதில் தெளிவான இலக்குகள், செயல்முறைகள் மற்றும் கால அட்டவணைக்கு ஏற்ப தொடர் ஆய்வுகள் நடத்தப்படும்.
அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு துறைகளும் தங்கள் பொறுப்புகளுக்கு ஏற்ப மார்ச் 31, 2026க்குள் தெளிவான ரோட்மேப் தயார் செய்ய வேண்டும். போதைப்பொருள் பிரச்னை இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், சிந்தனை திறனையும், செயல்பாட்டு திறனையும் நேரடியாக பாதிக்கிறது.
கடந்த 10-11 ஆண்டுகளில் அரசின் நடவடிக்கைகள் மூலம் கணிசமான வெற்றி கிடைத்துள்ளது. இனி முழு வீச்சில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”
இந்த அறிவிப்பு நாடு முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கு புதிய வேகத்தை அளித்துள்ளது. மத்திய அரசு இதை நார்கோ-டெரரிசம் என்று அழைத்து, விநியோக சங்கிலியை அழிப்பது, தேவையை குறைப்பது, பாதிப்பை குறைப்பது ஆகிய மூன்று அணுகுமுறைகளுடன் தீவிரமாக செயல்பட உள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களை சீரழிப்பதால், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக கருதப்படுகிறது. அமித் ஷாவின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பற்றி எரியும் தி.குன்றம் விவகாரம்..!! திமுகவின் திட்டமிட்ட அரசியல் மோதலா..?? கிளம்பும் எதிர்ப்புகள்..!!