×
 

வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!

90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது, திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவர் பேசியதாவது; வெல்ல முடியாது என்று சொல்லப்பட்ட ஒடிசாவில் தனி பெரும்பான்மையுடன் 2024ல் பாஜக ஆட்சி அமைத்தது. 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சாதனை டெல்லியில் சாதனை செய்யப்பட்டது போல, 2026 இல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை கண்டிப்பாக மலர போகிறது. 2026 தேர்தலில் தமிழக மக்கள் திமுக ஆட்சியை தூக்கி எறிய காத்திருக்கிறார்கள். 

திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி பட்டியலில் 10% மட்டும்தான் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் 90% நிறைவேற்றி விட்டதாக பொய் பேசுகிறார்கள். ஸ்டாலின் சார்! தேர்தல் வாக்குறுதி பட்டியலை எடுத்து வாருங்கள். அதைப் பார்த்து சொல்லுங்கள் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் என்று... டாஸ்மாக் மூலம் திமுக அரசு 35 ஆயிரத்து 775 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளது. ஊழலால் மட்டுமல்ல கள்ளச்சாராயத்தாலும் இந்த நாட்டு மக்கள் அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். 

இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

தமிழகத்தில் சாதி பிரச்சனையாலும், பிரிவினை வாதத்தாலும், அரசியல் லாபங்களை கருத்தில் கொண்டு திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல், வேலைகள் இல்லாமல் அவர்கள் துன்பத்தில் இருக்கும் நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வருக்கு இது பற்றி எந்த அக்கறையோ கவலையோ கொஞ்சம் கூட இல்லை. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிரதமர் மோடிக்கு திமுக ஏன் நன்றி தெரிவிக்கவில்லை. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 8 கொலை! அதளபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு.. அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share