2026 தேர்தலே இலக்கு.. வரும் காலம் நமதே! ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா..!
நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் வரும் காலம் நமதே என்று பாஜக உயர்மட்ட மையக்குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!
மாநில, மாவட்ட, மண்டல பாஜக நிர்வாகிகள் முழு முயற்சியோடு பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கூட்டணி கட்சிகளின் நட்பை பாராட்டுவதுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: தூங்கா நகரில் அமித்ஷா.. பிரம்மாண்ட மேடைகள்.. தடபுடல் ஏற்பாடுகள்!