அதிரடியாக இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை; அமமுக துணைப் பொதுச்செயலாளர் வீட்டில் ரெய்டு!
தஞ்சாவூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் , அ.ம.மு.க துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி இல்லம் தஞ்சாவூர் தளவாய் பாளையத்தில் உள்ளது. இவர் கடந்த 2011 முதல் 2016 வரை தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி அன்பரசன் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமி சென்னையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் பணம்... பிரபல சொகுசு விடுதிக்கு சீல் வைத்த அமலாக்கத்துறை - நடந்தது என்ன?
வீட்டில் அவரது மகன் மட்டுமே உள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் தற்போது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாயின் விலை ரூ.50 கோடியா? புருடா விட்ட பிரபலம்.. அமலாக்கத்துறை ரெய்டில் அம்பலம்..!
 by
 by
                                    