18 பேரை காவு வாங்கிய அமோனியா வாயு முற்றிலும் அகற்றம்... நாளை விடிந்ததுமே காத்திருக்கும் தரமான சம்பவம்...!
அமோனியா வாயு அகற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றன. நாளை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்படும் என எதிர்பார்ப்பு.
பெரியபாளையம் அருகே கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 4 நாட்களாக நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றன. நாளை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்படும் என எதிர்பார்ப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 83 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தொழிற்சாலையில் உள்ள அமோனியாவை அகற்றுவதற்காக வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு துறை, மாசுக் கட்டுப்பாட்டு துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகளுடன் அமோனியா வாயு எடுக்கும் பணிகள் நடைபெற்றன.
அமோனியாவை கையாளுவதில் சிறந்த நிபுணர்களைக் கொண்டு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் சேமிப்பு கலன்களில் இருந்த அமோனியா வாயு குழாய் மூலம் டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. பின்னர் பாதுகாப்பாக திங்கள் அதிகாலையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய 5 டன் அமோனியா வாயு டேங்கர் லாரி சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்திற்கு சென்றது.
இதையும் படிங்க: இவர்களுக்கு இனி மதுபான விற்பனை கிடையாது... கட் அண்ட் கறாராக அறிவித்த அமைச்சர் விக்னேஷ்...!!
எனினும் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் எஞ்சி இருந்த அமோனியாவை அகற்றும் பணிக்காக திங்கள், செவ்வாய் தினங்களில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கந்தக அமிலம் கொண்டு கம்ப்ரஸர் வைத்து அமோனியா வாயு கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. திங்களன்று அதிகாலையில் சென்ற டேங்கர் லாரி மீண்டும் வழவழைக்கப்பட்டு, குழாய் மூலம் சுமார் 400 கிலோ எடையுள்ள அமோனியா வாயு டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
செவ்வாய் இரவு அல்லது புதன் அதிகாலையில் அமோனியா ஏற்றியுள்ள டேங்கர் லாரி பாதுகாப்பாக புறப்பட்டு சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக பாதுகாப்பு கருதி பெரியபாளையம் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்ட நிலையில் தடை நீக்கி போக்குவரத்து சீராகி உள்ளது. இதனிடையே புதன்கிழமை காலை வருவாய் துறையினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹3 கோடி! செட்டிநாடு குழும தலைவர் முத்தையா நன்கொடை!