பள்ளிக்கு விடுமுறை கொடுத்து முகாம் நடந்த சம்பவம்! ஏத்துக்கவே முடியாதது... அன்பில் மகேஷ் கடும் கோபம்
அரசு பள்ளிக்கு விடுமுறை விட்டு உங்களுடன் ஸ்டாலின் முகம் நடத்தப்பட்டு இருப்பது ஏற்க முடியாதது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, மக்களின் அன்றாடத் தேவைகளை அவர்களின் வாசலில் நிறைவேற்றும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை 2025 ஜூலை மாதம் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், அரசுத் துறைகளின் 46 முக்கிய சேவைகள் – சாதி சான்று, பட்டா மாற்றம், பென்ஷன், ஆதார் திருத்தம் போன்றவை – மக்களிடம் நேரடியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன, அதில் அரசு பள்ளிகளும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின் மையமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த முகாம்கள் அரசு பள்ளிகளில் நடத்தப்படுவதால் எழுந்துள்ள பல்வேறு விமர்சனங்கள் அரசின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. இவை வெறும் அரசியல் பிரச்சாரத்தின் போர்வையில் மட்டுமே இருப்பதாகவும், உண்மையான சேவைக்குப் பதிலாக பல சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான இடமாக இருக்க வேண்டிய பள்ளிகளை அரசியல் நிகழ்ச்சிகளின் களமாக மாற்றுவது, கல்வியின் தரத்தை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் கண்டன குரல்கள் எழுந்தது.
இதையும் படிங்க: ஊரை அடிச்சு உலை வைக்கும் திமுக நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் பலிகடா! அண்ணாமலை விளாசல்
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் தன்னிச்சையாக அதை செய்ததாகவும், இனி இதுபோல் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நாளை 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.. எந்தெந்த ஏரியா தெரியுமா..??