×
 

இது RESULT தான்..! LIFE இல்ல..! +2 மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை..!

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்ற சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய உயர்நிலை வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு +2 தேர்வுகள் மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றன.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.20% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வுக்கு மே 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய சூழலில், தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அன்பில் மகேஷ் மீண்டும் அமைச்சராவார்! உதயநிதி ஸ்டாலின் உறுதி!! காட்டூரில் பிரசாரம்!

இது 'Result' தான், இதுவே ‘life' கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் வழிகாட்டுதலில், 2025-26 கல்வியாண்டில் நாம் மேற்கொண்ட சீரிய பணிகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் சாதனை படைக்கும் என தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! துணைத் தேர்வு விண்ணப்ப தேதிகளும் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share