×
 

#BREAKING: ரெய்டு..! அன்பில் மகேஷ் மீது பாய்ந்த வழக்கு..! அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு..!!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவு பணம் வசூலித்த மோசடி விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அரசகுமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இளங்கோவன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரமுயர்த்தல், கட்டிடத் திட்ட அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை விரைவில் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடியில் சுமார் நூறு கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசகுமார் தலைமையில் இயங்கிய பதிவு செய்யப்படாத சங்கம் மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் இருநூற்று ஐம்பது பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பணப் பரிவர்த்தனைகளின் தடத்தைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.இந்த விசாரணையின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதையும் படிங்க: பெயர் மாற்றும் ஆர்வம் நிதி ஒதுக்கீட்டில் இல்லை... நியாயமா CM..? வெளுத்துவிட்ட அன்பில் மகேஷ்..!!

போலீசார் குழுவினர் வீட்டிற்குள் நுழைந்து ஆவணங்களைப் பரிசோதித்து வருகின்றனர். தொடர்புடைய பல இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது இந்த அனுமதி தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. அதனால் இந்த விசாரணை அவரது இல்லத்திற்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share