லஞ்சம் கொடுத்தேன்..! பேரவையில் புயலை கிளப்பிய மரிய வில்சன்... அன்பில் மகேஷ் பதிலடி.!!
அமைச்சர் மரிய வில்சனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்தார்.
நிதி அமைச்சர் மரிய வில்சன், பள்ளிக் கல்வித் துறை தொடர்பான விவாதத்தின் போது கடந்த ஆட்சியைக் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் பேசியபோது, முந்தைய அரசின் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அந்த முறைகேட்டில் தானும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்றும், தனது சொந்தப் பள்ளிக்காகவே பணம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பேரவையில் பேசிய அமைச்சர், “கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். கட்டாயப்படுத்தி பணத்தை வாங்கினார்கள்” என்று நேரடியாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் ஆவணச் சாட்சிகளைக் காட்டிலும் தானே நேரடிச் சாட்சி என்றும் உறுதியாகப் பேசினார். “பேரவையில் சாட்சி சாட்சி என்று கேட்கிறார்கள். ஆவண சாட்சி வந்துவிட்டுப் போகட்டும். பள்ளிகளில் பணம் வசூலிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் நானே ஒரு சாட்சிதான்” என்ற அவரது வார்த்தைகள் அவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யான வழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் மரிய வில்சன் புகாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமைச்சர் மரியவள் செல்லிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். உயர்கல்வித்துறை குறித்து பேசும்போது பேரவை சம்பந்தம் இன்றி அமைச்சர் மரியவசன் குறிப்பீடு செய்து பேசியதாகவும் லஞ்சம் கொடுத்ததற்காக அமைச்சர் மரிய வின்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!
கல்வித்துறை அமைச்சர் துறை சார்ந்த இன்னும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். லஞ்சம் கொடுத்தேன் என்று பேசுவதை தவறு என்றும் ஏற்கனவே இதே குற்றச்சாட்டை தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். நவோதயா பள்ளி வழக்கில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு தமிழக வெற்றிக்கழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்... அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!