×
 

"வாயா என் தங்கமே"..! கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... நல்லதே நடக்கும்.. நம்பிக்கை தெரிவித்த அன்புமணி..!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த ராமதாஸ் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான நிலையில் இருந்து வந்தது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த மோதல் தீவிரமடைந்தது. கட்சியின் கூட்டணி முடிவுகள், அதிகாரப் பங்கீடு மற்றும் தலைமைப் பொறுப்பு சார்ந்த கருத்து வேறுபாடுகள் இந்தப் பிளவை ஆழப்படுத்தின.

ராமதாஸ் தரப்பு அன்புமணியின் சில முடிவுகளை ஏற்க மறுத்த நிலையில், அன்புமணி தரப்பும் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியது. இதனால் இரு தரப்பினரும் தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும் அளவுக்கு நிலைமை முற்றியது. 

இந்தப் பின்னணியில் ராமதாஸ் தனது மகன் அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினரை நீண்ட காலமாக சந்திக்காமல் இருந்தார். குடும்ப உறவுகள் அரசியல் மோதலால் பாதிக்கப்பட்டதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸின் இல்லத்தில் குடும்ப சந்திப்புகள் வெகுவாகக் குறைந்தன. இந்த இடைவெளி குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக அன்புமணியின் மகள்கள் மத்தியில் ஆழமான வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பெற்றோரின் திருமண நாள் கொண்டாட்டத்தை ஒட்டி அன்புமணி ராமதாஸ் தன் குடும்பத்தினருடன் சென்று ஆசீர்வாதம் வாங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்த ராமதாஸ் அன்புமணியை கட்டியணைத்து கண்ணீர் சிந்தி முத்தம் கொடுத்தார். தனது பெற்றோரை சந்தித்த பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இனி நல்லதே நடக்கும் என்று தெரிவித்தார். 

"அப்பா, அம்மாவின் திருமண நாளில் அவா்களை சந்தித்து ஆசிா்வாதம் பெற்றேன், இனி நல்லது நடக்கும் என கூறியுள்ளார். தந்தை ராமதாசுடன் ஒன்றரை ஆண்டாக நிலவும் மோதல் போக்கு குறித்த கேள்விக்கு அன்புமணி இவ்வாறு பதில் கொடுத்தார். 

இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்.. பள்ளிகள் திறப்பை தள்ளிப் போடுங்க..!! ராமதாஸ் வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share