×
 

1100 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை... அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம்...!

1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை என்ற அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி என்றும் தகுதியானவர்கள் இருந்தும் நிரப்பாமல் இருப்பது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா எனவும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

திமுக அரசு நினைத்திருந்தால் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும் என்றும் ஆனால், ஐந்தாண்டுகளாக இதற்காக துரும்பைக் கூட அசைக்க வில்லை எனவும் அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லாததும் முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 1,100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாக அன்புமணிக்கு உரிய புகாருக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக தலைமை ஆசிரியர்கள் நியமிப்பதில் சிக்கல் நீடித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருமகளின் பதவி இனி மகளுக்கு!! ஆட்டத்தை ஆரம்பித்தார் ராமதாஸ்! சவுமியா அன்புமணியின் தலைவர் பதவி காலி!

இந்த ஆண்டு மட்டும் மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அக்டோபர் 13 அரசாணை வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பச்சை துரோகம் செய்த அன்புமணி! ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! ஸ்ரீகாந்தி கொந்தளிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share