×
 

பாமக சார்பில் யார் போட்டி? விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அன்புமணி நேர்காணல்...!

பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அன்பு மணி நேர்காணல் நடத்துகிறார்.

பாமக சார்பில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேர்காணல் நடத்தத் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அணியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் முடிவை பாமக ஏற்கனவே எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கட்சி சார்பில் தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை விரைவுபடுத்தும் வகையில் விருப்ப மனு பெறும் நடைமுறை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. அன்புமணி தலைமையிலான பாமக அணியினர் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

இதில் 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களைத் தேர்வு செய்யும் முக்கியமான கட்டமாக நேர்காணல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் இன்று தொடங்கி வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். மாவட்ட வாரியாக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வேட்பாளர் ஆர்வலர்களை அழைத்து அன்புமணி நேரடியாக நேர்காணல் செய்கிறார். சென்னை பனையூரில் உள்ள பாமக அலுவலகமே இந்த நேர்காணலுக்கான மையமாக செயல்படுகிறது.

இதையும் படிங்க: NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு விடிவெள்ளி... ரெண்டு மாசம் தான் திமுகவுக்கு டைம்..! அன்புமணி அதிரடி..!

இன்று வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் நேர்காணல் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்து நடைபெறும். இந்த நேர்காணலின் மூலம் வேட்பாளர்களின் தகுதி, கட்சி மீதான பற்று, தொகுதியில் உள்ள செல்வாக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திறன் போன்றவற்றை அன்புமணி மதிப்பீடு செய்வதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆம்னி பஸ் கட்டண கொள்ளை... மக்கள் புகார் கொடுக்க முன் வருவதில்லை..! அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share