இனி நாங்க தான்... ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி..! அன்புமணி திட்டவட்டம்..!!
ஊழல் நிறைந்த ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இணைந்து விட்டது. ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட பாமகவிற்கு ஒரு சீட் ஒதுக்கியது அதிமுக. அதன்படி அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.
அதன்படி மூன்றாவது முறையாக அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகுவார். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் மிக மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை தான் திமுக முழுமையாக நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார்.
98 விழுக்காடு, 99 விழுக்காடு என முதலமைச்சர் பொய் கூறி வருவதாகவும், மக்களுக்கு அனைத்தும் தெரியும் எனவும் தெரிவித்தார். செவிலியர்கள் ஒரு பக்கம், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் என அனைத்து தரப்பினரும் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோபத்தில் போராடி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாம்பழ சின்னத்துக்கு போட்டா போட்டி..!! ராமதாஸ் வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..!!
இவர்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் களம் அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஊழல் நிறைந்த ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் உறுதியுடன் தெரிவித்தார். 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப விசில் அடிக்காதீங்க..! தொண்டர்களை ஜாலியாக கலாய்த்த அன்புமணி..!