×
 

குறட்டை விட்டு தூக்கம்.. கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு.. அன்புமணி அடுக்கடுக்கான புகார்!

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, தமிழக அரசு கோட்டை விட்டதாகவும் மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூலை 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டது.

இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவு என்று அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே போவதற்கு காரணம், தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட தவறுகளும் தான் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

மாநிலங்களின் உரிமைகளை மீட்பது தான் தங்களின் லட்சியம் என்று கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை எனவும் சுமார் ஓராண்டு காலம் உறங்கிக் கொண்டிருந்து, மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் நிதியைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது எனவும் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு உடனடியாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்திற்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share