பெண்களுக்கு பாதுகாப்பா? மீண்டும் மீண்டும் பொய் பேசும் முதல்வர்..! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பொய் சொல்வதாக அன்புமணி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிக அளவில் பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு என்றும் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசி இருந்தார். தமிழ்நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகின்றன. இருப்பினும் தமிழ்நாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதாக முதல்வர் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் நடப்பதாகவும் தெரிவித்தார். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாட்டால் தான் குற்றச்சம்பழங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் குமுடிபூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.
இதையும் படிங்க: NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு விடிவெள்ளி... ரெண்டு மாசம் தான் திமுகவுக்கு டைம்..! அன்புமணி அதிரடி..!
கிராம முதல் நகரம் வரை போதை பொருள் பரவியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். 43 ஆயிரம் கிராமங்களிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். என்னென்ன போதைப் பொருட்கள் இருக்கிறதோ அத்தனையும் தமிழ்நாட்டில் பரவி கிடப்பதாக கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7500 என்றும் 217 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதில் குழந்தைகள் ஏழு பேர் அடங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்னி பஸ் கட்டண கொள்ளை... மக்கள் புகார் கொடுக்க முன் வருவதில்லை..! அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்..!