×
 

தெலங்கானாவை பார்த்து கத்துக்கோங்க! தமிழக அரசுக்கு வழிகாட்டும் அன்புமணி..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக   மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில்,  குறுவை சாகுபடி செய்ய  உழவர்களை ஊக்குவிப்பதற்கான  குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.

காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில்,  நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட,  பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள்  இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதாகவும்,  ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் உண்டா.? திமுக கூட்டணி கட்சி சொன்ன நச் பதில்!!

குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல்,காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து உழவர்களுக்கும்  வழங்க வேண்டும் எனவும் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று  ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் ஏமாற்றும் திராவிட மாடல்.. மின் கட்டண உயர்வில் நாடகம்.. தோலுரித்த அன்புமணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share