ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!
ஒட்டு கேட்கும் கருவி குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள் ஆய்வு செய்து அவர்கள் என்ன அறிக்கை கொடுக்கிறார்களோ அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வு தொடர்ந்து கொண்டே இருப்பதாக ராமதாஸ் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சி மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல், கட்சியின் தலைமைப் பொறுப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகிகளின் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பாக உச்சத்தை எட்டியுள்ளது. இதனுடன், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அதற்கு அன்புமணியின் விசாரணைக் கோரிக்கை ஆகியவை மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
பாமகவில் கடந்த சில மாதங்களாகவே ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக வெளிவந்தன. ராமதாஸ், கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார். மறுபுறம், அன்புமணி, கட்சியின் செயல் தலைவராக இருந்தாலும், முழுமையான தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இந்த மோதல், இருவரும் ஒருவரையொருவர் ஆதரிக்கும் நிர்வாகிகளை நீக்குவதன் மூலம் மேலும் தீவிரமடைந்துள்ளது. உதாரணமாக, ஜூலை 6ம் தேதி அன்று, ராமதாஸ், அன்புமணியை கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கி, 21 புதிய பொறுப்பாளர்களை நியமித்தார். இதற்கு பதிலடியாக, அன்புமணி, ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை, உதாரணமாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ. அருளை, கட்சியிலிருந்து நீக்கினார். இந்த பரஸ்பர நீக்கங்கள் கட்சிக்குள் குழப்பத்தையும், தொண்டர்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: படுகொலை செஞ்சுட்டு பரிகாரம் தேடுறீங்களா? தயவுசெஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க! வெளுத்து வாங்கும் அன்புமணி!
இந்த மோதலின் உச்சகட்டமாக, ராமதாஸ், தனது தைலாபுரம் இல்லத்தில், தான் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை மறைமுகமாக குறிவைத்து எழுப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், அன்புமணி, இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், ராமதாஸ், தனது சமூக வலைதளக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றியதாகவும், அதை மீட்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரில், அவரது எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளின் பாஸ்வேர்டு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ராமதாஸின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
சென்னையிலிருந்து 5 பேர் கொண்ட துப்பறியும் தனியார் நிறுவன குழுவினர் தைலாபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்து ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்தனர். ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்தபோது மருத்துவர் ராமதாஸ் இல்லத்திற்குள் கட்சி நிர்வாகிகள் யாரையும் அனுமதிக்காமல் மூன்று மணி நேரம் ஆய்வு செய்தனர். தனியார் நிறுவனர் ஒட்டு கேட்பு நிறுவனத்தினர் ஆய்வு செய்து வெளியே புறபட்டு சென்றததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்...
ராமதாஸ் பாட்டாளி சொந்தங்கள் என்னை தேடி வந்து கொண்டே இருக்கப் போகிறார்கள், வயதான பாட்டியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் வந்து கொண்டே இருப்பதாகவும் முன்பை விட இப்போது கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் ஒட்டு கேட்கும் கருவி குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள் ஆய்வு செய்து அவர்கள் என்ன அறிக்கை கொடுக்கிறார்களோ அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வு தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறினார்.
ஒட்டு கேட்பு கருவி விஷயத்தில் சந்தேகம் இருக்கிறதா? இல்லையா? என்பது ஆய்வு செய்து முடித்த பிறகு தான் தெரியும், பொதுக்குழு கூட்டுவதற்காண காலம் இன்னும் வரவில்லை. காலம் வரும்போது செய்தியாளரிடம் பொதுக்குழுவை கூட்டுவோம். பொதுக்குழுவில் செய்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு.. உடனே செஞ்சி முடிங்க.. கறார் காட்டிய அன்புமணி..!