மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!
அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் கொடுத்த அன்புமணி மற்றும் தம்பிதுரை ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து காலியாகும் ஆறு இடங்களுக்கான போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தேர்தல் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது.
தற்போதைய ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரும், அதிமுகவின் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே. வாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
திமுக சார்பில் நான்கு வேட்பாளர்களும், அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவை பொருத்தவரை இரண்டு சீட்டுகளை தனது கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கியும், மற்ற இரண்டு இடங்களை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கும் ஒதுக்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஸ்டோபர் திலக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக சார்பில் தம்பி துரை மற்றும் பாமக தலைவர் அன்புமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல்..!! அதிமுக சார்பில் அன்புமணி, தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்..!!
நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் ஆறு பேரும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் மனு கொடுத்திருந்த தம்பிதுரை மற்றும் அன்புமணி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அன்புமணிக்கு ஷாக்...!! - ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!