×
 

குடுமிபிடி சண்டை! தேர்தல் ஆணையத்திற்கே சென்ற பாமக பஞ்சாயத்து.. இரு தரப்பும் பதவிக்கு போட்டா போட்டி..!

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதல், கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல், இரு தரப்பினரும் தனித்தனியாக செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்துள்ளது. ராமதாஸ், பாமகவின் நிறுவனராகவும், அன்புமணி, கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளனர். இருவருக்கும் இடையே கட்சியின் முழு கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.

அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் கெஞ்சி கேட்டதால்தான் பாஜகவோடு கூட்டணி அமைத்தேன் என்று ராமதாஸ் கூறியிருந்தார். ராமதாஸ் சொன்னதால்தான் பாஜக ஒரு கூட்டணி அமைத்தேன் இல்லை என்றால் அதிமுகவோடு கூட்டணி அமைத்து இருக்கலாமே என்று அன்புமணி கருத்து தெரிவித்திருந்தார். ஒருவருக்கொருவர் எதிர் கருத்துக்களை முன்வைத்து வருவதால் இந்த பிரச்சனை எப்போது ஓயும் இன்று தெரியாத புதிராகவே உள்ளது. காரணம் நேற்றைய தினம் அன்புமணியும் ராமதாசும் தனித்தனியாக செயற்குழு கூட்டத்தையும் நிர்வாக குழு கூட்டத்தையும் நடத்தினர். முகுந்தனுக்கு பதவி கொடுத்ததால் தான் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இந்த சூழ்நிலையில் முகுந்தனின் தாயாரான ஸ்ரீகாந்தியை ராமதாஸ் தரப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செய்திருந்தது அன்புமணிக்கு எதிராக அவரை களத்தில் இறக்கியதாகவே தெரிகிறது. அன்புமணியின் சகோதரி தான் ஸ்ரீகாந்தி. ஆனால் ஸ்ரீகாந்தியின் மகனுக்கு பதவி கொடுத்ததாலேயே உட்கட்சிப் பூசல் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ஓயாத சண்டை.. நாங்களும் நடத்துவோம்! அன்புமணி தலைமையில் நிர்வாக குழு கூட்டம்..!

இதற்கு ஏட்டிக்கு போட்டியாக அன்புமணி தரப்பில் நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. ராமதாஸ் தனது கூட்டத்தில் தனக்கு தான் கையெழுத்து போடும் உரிமை இருக்கிறது. அதனால் வெற்றி பெற வாய்ப்பு இருப்பவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுங்கள் என்றும் கூட்டணியில் தான் தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். அன்புமணி தரப்பில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், ராமதாஸ் தரப்பில் நடந்த செயற்குழு கூட்டம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதில் யாருக்கு பாதகம் என்று பார்த்தால் பாமக தொண்டர்களுக்கு தான். ராமதாஸ் பின்னால் செல்வதால் அல்லது அன்புமணியின் பின்னால் செல்வதாக என்ற குழப்பத்தில் உள்ளனர். 

இந்த நிலையில் பாமகவின் பஞ்சாயத்து தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணியின் பாமக தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது என்று ராமதாஸ் தரப்பும் பாமகவிற்கு நானே தலைவர் என தேர்தல் ஆணையத்தையும் ராமதாஸ் அனுப்பியதாக தெரிகிறது.. ராமதாஸின் நடவடிக்கைக்கு எதிராக அன்புமணி தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் செல்லாது என்றும் கட்சி விதிப்படி தலைவர் இல்லாமல் செயற்குழுக் கூட்டத்தை கூட்ட முடியாது எனவும் 15 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றும் அன்புமணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜூன் வரை அன்புமணியின் பதவி காலம் உள்ளதாக கூறி தேர்தல் ஆணையத்தை அணுகுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING: எனக்கே முழு உரிமை.. கூட்டணி தான் முடிவு! அன்புமணி ஆதரவாளர்களை சுளுக்கெடுத்த ராமதாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share