அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மீது மாணவி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகார் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் ஒரு பெண் மாணவி தனது பேராசிரியர் ஞானவேல் பாபு மீது புகார் அளித்தார்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் பெண் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. புகாரின்படி, மாணவி மூன்றாம் ஆண்டு படிக்கத் தொடங்கியபோது இருந்து இந்த தொல்லை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சுமார் மூன்று ஆண்டுகளாக நீடித்த இந்த சம்பவத்தில், பேராசிரியர் ஞானவேல் பாபு மாணவியின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி முதலில் தந்தை போன்று நடந்துகொண்டு பண உதவி செய்ததாகவும், பின்னர் அதைத் தவறாகப் பயன்படுத்தி பாலியல் ரீதியான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
நேரில் சந்திக்கும்போது தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததுடன், தொலைபேசி வாயிலாகவும் அநாகரிகமான பேச்சுகள், அசிங்கமான செய்திகள் அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தன்னை மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் இதுபோன்ற தொல்லை கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மாணவி தனது புகாரில், பேராசிரியர் தன்னுடன் தொடர்புகொண்டு பேசும்போது தவறான எண்ணத்துடன் செயல்படுவதாகவும், வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மீண்டும் ஓர் அதிர்ச்சி... பேராசிரியரால் மாணவிக்கு பாலியல் தொல்லை..! கொந்தளித்த அண்ணாமலை..!!
மாணவியின் புகாரால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டாரம் தெரிவித்து வந்த நிலையில் பிரச்சனை வீரியம் எடுத்தது. அண்ணா பல்கலைக்கழகம் அருகே மாணவர் அமைப்பினர் பேராசிரியரை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேராசிரியர் ஞானவேல் பாபு பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, மாணவி கொடுத்த பாலியல் புகார் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை..! திமுக நிர்வாகியின் குரூர புத்தி..!! தட்டி தூக்கிய போலீஸ்..!!