×
 

#BREAKING கடைசி நாளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக EX.துணைவேந்தர் - பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!

ஓய்வு பெற இருந்த கடைசி நாளில் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வு பெற இருந்த கடைசி நாளான இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வு பெறும் வயது நிறைவடையாத காரணத்தால் இன்றுவரை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சஸ்பெனண்ட் செய்யப்பட்டிருக்கிறார். 

 அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெனண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அவர் ஏற்கனவே துணைவேந்தர் பதவி நிறைவடைந்துவிட்டது, ஆனாலும் கூட கடந்த ஓராண்டு காலமாக அவர் அந்த மெக்கானிக்கல் துறையிலே பேராசிரியராக பணியாற்றி வந்தார். இன்று அவர் ஓய்வு பெற இருந்தார். ஓய்வு பெற இருந்த கடைசி நாளில் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் 440 தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற்று இயங்க வேண்டும். அவ்வாறே அங்கீகாரம் பெறுவதில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக சமீபத்தில் புகார் இருந்தது. அந்த புகாரில் வேல்ராஜ் அவர்களுடைய பெயரும் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது. எனவே அந்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வு பெற இருந்த கடைசி நாளில் அவருக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட எல்லாம் நிறுத்தி வைத்து அவரை தற்காலிகமாக சஸ்பென்ட் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: சாதி விட்டு சாதி திருமணம்... சனாதானத்தின் சதி... கொந்தளித்த திருமா...!

அதாவது அந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகுதான் அந்த வழக்கின் தன்மைக்கு ஏற்ப அவர் ரிட்டயர்மென்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு கடைசி நாளில் இது போன்று சஸ்பென்ட் செய்யக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில் உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வேறு சாதி பெண்ணை காதலித்த இளைய மகன்; மதுவுக்கு அடிமையான மூத்த மகன் - கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share