குற்றவாளி ஞானசேகரனுக்கு குண்டாஸ் தேவையா? பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு...!
ஞானசேகரன் மீதான குண்டாஸ் குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் டிசம்பர் 25-ஆம் தேதியன்று 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தீர்ப்பை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க... அதிரடி காட்டிய கோர்ட்...!
ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஞானசேகரன் சட்டம் தேவையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக விசாரிக்கும்போது, பதில் அளிக்க கால அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஞானசேகரன் மீதான குண்டாஸ் தேவைதானா என்பது குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!