×
 

முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

நிருபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை கரூர் போலீஸ் காப்பாற்ற முயற்சிக்கிறது என அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம் என்றும் சாடியுள்ளார். கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா என்று கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை என்றும் ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது எனவும் தெரிவித்தார். கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது என்று கூறிய அண்ணாமலை, எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம் என்று சாடினார்.

இதையும் படிங்க: அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share