×
 

குப்பை வண்டியில் கர்ப்பிணிகளுக்கு மருந்து... இவ்ளோ அலட்சியமா? விளாசிய அண்ணாமலை

குப்பை வண்டியில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு மருந்து கொண்டு சென்றதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பை வண்டியில் மருந்துகள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இருமல் மருந்து குடித்ததில் மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் மீது கடும் குற்றச்சாட்டையும் முன் வைத்தார். சுகாதாரத்துறை தரங்களை நிலை நிறுத்துவதில் தோல்வியடைந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

சென்னை கொடுங்கையூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகளை குப்பை லாரியில் கொண்டு செல்லும் அவமானகரமான செயல், தமிழக மக்களின் நல்வாழ்வை திமுக அரசு முழுமையாகப் புறக்கணிப்பதைப் பற்றி நிறையவே பேசுவதாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!

இத்தகைய வெளிப்படையான திறமையின்மை நிர்வாகத்தை கேலிக்கூத்தாக மாற்றி உள்ளது என்றும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட நச்சு இருமல் சிரப்பால் 21 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த பிறகும், இது தமிழ்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட புறக்கணிப்பு மற்றும் அலட்சியத்தின் நேரடி விளைவு என்று தெரிவித்தார்

ஆனால் மாநில சுகாதாரத் துறை மிக அடிப்படையான தரங்களை நிலைநிறுத்துவதில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு குப்பை வண்டியில் மருந்துகள் கொண்டு செல்வது தொடர்பான புகைப்படத்தையும் அண்ணாமலை பகிர்ந்து உள்ளார்.

இதையும் படிங்க: நயினாருக்கு கல்தா கொடுத்த இபிஎஸ்... ஜே.பி. நட்டாவும் இப்படி கைவிரிச்சிட்டாரே... அதிர்ச்சியில் கமலாலயம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share