×
 

முதல்வர் சாப்பிடும் இட்லிக்கு சட்னியா..? சாம்பாரா..? இதுதான் சரிபார்ப்பு தள நிலைமை..! விளாசிய அண்ணாமலை..!!

தகவல் சரிபார்ப்பாகத்தின் நிலை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று, மத்திய சட்டத் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவால், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுத்த பதில் தரவுகளின்படி, 2021 - 2025 வரை ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 39,999 என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தத் தரவுகள், தேசிய நீதித்துறை தரவுத் தளம் (NJDG) படி, எடுக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். நான் பேசும்போது, 39,900 வழக்குகள் என்று, 99 வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி விட்டேன் என்றுதான், உண்மையில் உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை உண்மை கண்டறியும் சரி பார்ப்பகத்தின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார்.

ஆனால், திமுகவின் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும்போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வரும் fact check இணைய தளம், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்களுக்கு விருப்பமான வழக்கு எண்ணிக்கையைக் கூறி, 20,989 வழக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் MLA..! அண்ணாமலை விமர்சனம்..!

அதிலும் குறிப்பாக, ஆண்டு வாரியாக வழக்கு விவரங்களைக் கூறும் போது, பதட்டத்தில், 2024 ஆம் ஆண்டு விவரங்களை இரண்டு முறை திருப்பிக் கூறுகிறார். எங்கிருந்து வந்த அழுத்தம் என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா அல்லது சாம்பாரா என்ற அளவில் தான், தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன என்றும் விமர்சனம் செய்துள்ளார். ஆகவே, தங்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share