எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!
அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் தன்னார்வலர்களை இணைத்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அடுத்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் அவர் அறிவித்த இந்த இயக்கத்திற்கு ஆன்லைன் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அவரது அழைப்பு வெளியான சுமார் மூன்றரை மணி நேரத்திற்குள் wetheleader.org இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக இணைந்தனர். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்ணாமலை தனது அறிவிப்பில், "We The Leaders" அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை அழைத்தார்.
இந்த இயக்கம் அடிமட்ட மட்டத்தில் தலைமைத்துவத்தை வளர்ப்பதையும், சமூக மாற்றத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அழைப்பு வெளியான உடனேயே தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர். இந்த வேகம் அண்ணாமலையின் செல்வாக்கையும், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் சந்தேகம் வலுக்கிறது! உண்மை நிலையை விளக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
இது தொடர்பாக கூறிய அண்ணாமலை, இணைந்து இயக்கத்திற்கு அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது என்றார். இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சி ஆரம்பித்த அண்ணாமலை! பாஜக அவசர ஆலோசனை! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!!