"எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!
ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழக வெற்றிக்கழக அரசின் நடவடிக்கைக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தவெக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறேன் என்று WE THE LEADERS தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். வழக்குகள் விரைவாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
எ.வ. வேலு வழக்குடன் கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை தவெக அரசு விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். ஆவின் குறைந்த செலவில் தயாரிக்க முன்வந்த போதிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு சத்துமாவு வாங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், பொங்கலுக்கு வழங்கப்பட்ட வேட்டியில் பருத்திக்குப் பதிலாக அதிக அளவில் பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டது என்றும் மாநில போக்குவரத்துத் துறையில் பல்வேறு ஊழல்களும், கொள்முதல் முறைகேடுகளும் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றமும் NOBLE STEELS நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்டது ஏன் என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!
மேலும், மு.க. ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து NOBLE STEELS தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு என்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சிக்கால முறைகேடுகளை விசாரிக்கும் தற்போதைய அரசின் முயற்சியை வரவேற்றுள்ள We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி, இலவச வேட்டி மற்றும் போக்குவரத்து முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் "WE THE LEADER"..! சரியான பாதை தான்... அண்ணாமலை உறுதி..!!