“வாயில அடி.. வாயில அடி...” - விஜயை எதிர்த்த அண்ணாமலைக்கு ஒரே மேடையில் பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்...!
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பரப்புரையை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் தொடங்கினார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் மக்கள் சந்திப்பு யாத்திரை மேற்கொள்கிறார். மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் பகுதியில் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக கூட்டணி கட்சி சார்பாக செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது, “கண்ணாடி கூண்டில் இருந்து கல்லை திமுக வீசிவருகின்றனர். நான்கரை ஆண்டுகளில் 88 பேர் கள்ளச்சாரயத்தில் இறந்துள்ளனர் இந்த அவமானம் தமிழகத்தில் தான். கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். என்ன பாவம் செய்தார்கள், 100பேர் காவல்துறையினர் கூட பாதுகாப்பில் இல்லை,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் மாறியுள்ளது. வேட்டி கட்டிய முதலமைச்சர் இப்போது பேண்ட் போடுகிறார். புட்பால் விளையாண்ட பேரன் இன்பநிதி் நடிகராக வரவுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தினசரி நாயோடு தான் போட்டோ போடுவார் அந்த நாய்க்கு மீசை கருப்பாக இருந்துச்சு இப்ப வெள்ளையாக இருக்கு. நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என சொல்வது தான் மாற்றம். ஆனால் மதுவிலக்குத்துறை அமைச்சரை சாராய அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருது” என திமுகவை சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.
இதையும் படிங்க: நச்சுன்னு 4 பாயிண்ட்... திமுக ஜோலியை முடித்த அண்ணாமலை... ஆட்டம் காணும் அறிவாலயம்...!
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, மக்கள் தியேட்டருக்கு போங்கள் படம் பாருங்கள் விசில் அடியுங்கள். ஆனால் ஒரு நடிகன் நல்லாட்சி தருவான் என்று நினைக்க வேண்டாம் என பேசினார். அதேமேடையில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற முடியும் என்று பேசிய பின் அனைவரும் என்றால் அனைவருக்கும் புரியும் என நினைக்கின்றேன் என பேசினார்.
அண்ணாமலை மறைமுகமாக தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சு தவெக கட்சியை கூட்டணிக்கு வரவேண்டும் என மறைமுகமாக அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா... தொலச்சிடுவேன்...” - உச்சக்கட்ட ஆவேசத்துடன் எச்சரித்த அன்புமணி...!