×
 

நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

ஊழியர்களின் ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நிலுவை ஊதியம் தொடர்பான விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் நான்கு தனி வட்டாட்சியர் அலகுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் 2026 ஆகிய மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை வரவேற்று வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டம் தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு காவிரி உபரி நீரைக் கொண்டு சென்று பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிக்காலம் கடந்த டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்தது.

தொடர்ந்து பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக ஜனவரி 1, 2026 முதல் டிசம்பர் 31, 2027 வரை இரண்டு ஆண்டுகளுக்கு பணிக்காலத்தை நீட்டிக்கக் கோரி மார்ச் 20, 2026 அன்றே தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அரசாணை வெளியாகவில்லை. இதனால் ஊழியர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டது.குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான சுமார் 66.52 லட்சம் ரூபாய் நிதியை விடுவிக்க மே 12, 2026 அன்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஊழியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை இப்பிரச்சினையை எடுத்துரைத்து தமிழக அரசை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.தமிழக அரசு இதற்குச் செவிசாய்த்து நிலுவையில் இருந்த மூன்று மாத ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இதனைப் பாராட்டி அண்ணாமலை தனது அறிக்கையில், தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: 'வீ தி லீடர்ஸ்' அடுத்த அதிரடி! புதிய அமைப்புடன் களமிறங்கும் அண்ணாமலை!! புதிய திட்டம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share