ஒதுங்கி நிற்கும் அண்ணாமலை! பாஜக தலைமை மீது அதிருப்தி? என்ன சொன்னாரு தெரியுமா?
டி டி வி தினகரன் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இணைந்த போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. டிடிவி தினகரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சென்னை தியாகராயநகரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டிடிவி தினகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார்.
என் டி ஏ கூட்டணியில் மிக முக்கிய தலைவராக இருந்தவர் டிடிவி தினகரன் என்றும் அரசியலில் நிலைத்திருக்கக்கூடிய தலைவர் எனவும் தெரிவித்தார். அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 2026 தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்பது மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார். அவர் மறுபரிசீலனை செய்வார் எனும் நம்பிக்கை உள்ளதாகவும் ஓபிஎஸ் சாதாரண அரசியல்வாதி கிடையாது என்றும் கூறினார். ஒரு தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பிரதமருக்காக ஓபிஎஸ் தனித்துப் போட்டியிட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: Be Cool செங்கோட்டையன்... பாத்துக்கலாம்! சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக
எல்லா பிரச்சினைகளும் வரும் காலத்தில் சரியாகிவிடும் என்றும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சாதாரண அரசியல்வாதிகள் கிடையாது என்றார். வேலை பளு மற்றும் தொண்டர்கள் நேரம் கேட்பதால் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனால் கட்சித் தலைவன் மீது எந்தவிதமான அதிருப்தியும் கிடையாது என்பதை தெளிவுப்படுத்தினார்.
இதையும் படிங்க: சண்டை போட்டுக்காதீங்க! உட்கட்சி பூசல் இருக்கவே கூடாது... அமித்ஷா கறார் உத்தரவு..!