கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!
கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட உச்சநீதிமன்றத்தின் வரவேற்பை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று கூறினார்.
யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய அவர், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் போலி கையெழுத்து வாங்கியது யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது தவறான முன் உதாரணம் என்று கூறினார்.
குட்கா வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்து, நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் இவற்றிற்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரியதாகவும் அப்போதெல்லாம் வாய் திறக்காத சீமான் கரூர் சம்பவத்தில் பதற்றப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!
தமிழகத்தில் பிறக்காத தமிழகத்தில் பணி செய்யக்கூடிய ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள் என பல விஷயங்களை நீதிபதிகள் கூறியிருப்பதாகவும், நீதிபதிகளை பற்றி நிறைய சொல்லப்போவதில்லை, குறையும் சொல்லப்போவதில்லை என்றும் தெரிவித்தார். மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அஜித்குமாருக்கு ஒரு நியாயம் கரூர் மக்களுக்கு ஒரு நியாயமா என்று கேட்டார்.
இதையும் படிங்க: எப்படி கிரிமினல் வழக்காச்சு? எதையும் சரியாக விசாரிக்கல… சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…!