×
 

ஒப்புக்கு சப்பாணி..! ஒரு USE- ம் இல்ல... பட்ஜெட்டை பந்தாடிய அண்ணாமலை..!

கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.

இடைக்கால பட்ஜெட் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக பட்ஜெட் மீதான அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். திமுக அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று கூறினார். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

வருமானம் இட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக திமுக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். கோவில்கள் புணரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். கோவில்கள் புனரமைப்புக்காக 8200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வெறும் 82 கோடி மட்டுமே கோவில்கள் புணரவைப்பதாக செலவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மொத்தமாக தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் என்ற விமர்சனம் செய்தார். எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த பட்ஜெட்டை படித்து விட்டால் அடுத்த ஆண்டு எதிர்க்கட்சியாக அமைதியாக அமர்ந்து கொள்ளலாம் என்பது போல ஒப்புக்கு சப்பாணி போல் நிதி அமைச்சர் பட்ஜெட்டை படித்து இருப்பதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்த நயினாரின் சர்ச்சை பேச்சு! பிரச்னை இன்றோடு முடிந்தது? அண்ணாமலை விளக்கம்!

தமிழக அரசுக்கு உருப்படியாக, பிரயோஜனமாக இந்த பட்சத்தில் எதுவும் கிடையாது என்றும் தன் புள்ளிவிவரத்தோடு எடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு பூஜ்ஜியம் ரூபாய் கொடுத்த பட்ஜெட் இது என்றும் கூறினார். திமுக அரசின் தோழி திட்டம், கலைஞர் கனவு திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டம் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: DMK FILES...! டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை... சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share