அஸ்திரத்தை அழிக்கும் இந்தியா..! பாக். MAP-லயே இருக்காது.. அண்ணாமலை எச்சரிக்கை..!
இதே மோதல் போக்கை தொடர்ந்தால் பாகிஸ்தான் மேப்பிலேயே இருக்காது என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனை இன்று நேற்று நடப்பது அல்ல என்றும் ஆனால் இந்தியாவின் பதிலடி அறத்தின் அடிப்படையிலானது எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு ஒவ்வொரு படி மேல் சென்று தான் பதிலடி கொடுத்து வருவதாகவும், பாகிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியாவிற்கு வந்து பாருங்கள் என்று கூறியதாகவும் டிஎன்ஏ எவிடன்ஸ் மற்றும் தொலைக்காட்சி உரையாடல்களை பாருங்கள் என்று கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவை அவமதித்ததாகவும், பாகிஸ்தான் அரசியல் கட்டுப்பாட்டில் ராணுவம் இல்லை, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் அரசு உள்ளதாக விமர்சித்தார். இப்போது கூட பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தான் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் தீவிரவாத தளங்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது., பாகிஸ்தான் அரசின் ராணுவ தளங்களையும் அல்லது முக்கிய இடங்களையோ குறி வைக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாகவும் ஆனால் அப்பாவி மக்கள் வாடும் பகுதிகளை குறி வைத்து மட்டுமே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அன்பும் அமைதியும் பெருகும் ஆண்டாக அமையட்டும்! அண்ணாமலை தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!
13 வது நாளாக எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அத்துமீறி ட்ரோன்கள் அனுப்பி பஞ்சாப், ராஜஸ்தான் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறிய அண்ணாமலை, தீவிரவாதிகள் செய்த தவறுக்கு தான் தீவிரவாதிகளின் மையங்களை நோக்கி இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாகவும் நம் மீது போர் தொடுக்கும் போது பதிலடி கொடுக்கவில்லை என்றால் நாம் கோழை என்றும் தெரிவித்தார். எந்த நாட்டின் எல்லையையும் பிடிப்பதற்காக நாம் சண்டை போடவில்லை என்றும், மிகச் சிறிய நாடான பாகிஸ்தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், இந்தப் போக்கு நெறித்தால் வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு! 51 தமிழக மாணவர்கள் ஜலந்தரிலிருந்து மீட்பு...