அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!
ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதிக்க முடியுமா? என்று 143 சட்ட விதிகளின்படி 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் இந்த விஷயத்தில் குழப்புவதாகவும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை 15 முறை ஜனாதிபதிகள் உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி கேட்டுள்ளதாகவும் இது முதல் முறை அல்ல என்றும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஏற்கனவே கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என இருந்த தீர்ப்பில் ஜனாதிபதி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இதே 143 விதியை பயன்படுத்தி கர்நாடகா மாநில அரசு ஏற்றிய சட்டம் செல்லுமா செல்லாதா என உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதாகவும், அதில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லாது என தீர்ப்பளித்ததாகவும் ஆகவே இதனை தமிழக முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அன்று 143 பயன்படுத்திய போது கேள்வி கேட்காதவர்கள் இன்று ஜனாதிபதி 143 விதியை பயன்படுத்துவது குறித்து கேள்வி கேட்பதாகவும், இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அன்று ஜனாதிபதி கேள்வி கேட்டது இனிச்சது! இன்று கேள்வி கேட்பது வலிக்குதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: துணை வேந்தர்கள் தடுக்கப்பட்டார்களா? ஆளுநர் சும்மா சொல்லவில்லை.. கொந்தளித்த தமிழிசை..!
இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் ஜனாதிபதி ஆகியோர் அவரவர் வரம்புக்குள் தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள் என்றும், ஆகவே ஜனாதிபதி பெற்றுள்ள 14 கேள்விக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு பதில் அளிக்க உள்ளனர் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ஆகவே இது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை என்று முதலமைச்சர் எப்படி கூற முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
2036 வரை தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொடரும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ஊட்டிலுக்கு கொஞ்சம் வெயில் குறைவு வெயில் குறைவாக இருந்தால் எதையெதையோ பேச தூண்டும். சென்னை வெயிலுக்கு வந்தவுடன் முதலமைச்சருக்கு எல்லாம் தெளிந்து விடும் என்றும் ஊட்டியில் உள்ளதால் தெளியாமல் உள்ளதாகும் சென்னை வெயிலுக்கு வந்தவுடன் 2026 இல் திமுக தோற்றுவிடும் என்று தெரிந்துவிடும் என்றும் அண்ணாமலை கூறினார்.
எல்லோரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்றும் பாஜக கூட்டணியை பொறுத்தவரை அது வலுவாகத்தான் உள்ளது என்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தான் தொண்டனாக பணி ஆற்றி வருவதாகவும் கூட்டணி விஷயங்கள் குறித்து தலைவர்கள் பதில் கூறுவார்கள் என்றும், தமிழக முதலமைச்சரை ஒரு சாமானியனாக இருந்து விமர்சிக்கலாம் என்றும் அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது என்றும் கட்சி குறித்து எனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் தலைவர்கள் தான் கூற வேண்டும் என்றும் ஓபிஎஸ் அவர்கள் என்றைக்கும் எங்களோடு தான் உள்ளார் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுமே கொலைக்களமாக மாறி உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்று உள்ளதாகவும் இது எந்த மாற்றுக் கருத்து இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
தற்போது நான் மிகவும் சுதந்திரமாக உள்ளேன் என்றும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றும் தமிழகத்தில் பிஜேபி காலூன்ற வேண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும் அதற்கான காலம் வரும் அதுவரை நான் தொண்டனாக பணியாற்றுவேன் எனக்கு எந்த ஒரு பவரும் தேவையில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் மாநாட்டை புறக்கணித்தது ஏன்? - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்!