கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!
அமைச்சர் கே.என். நேருவின் துறையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெறுவதாகவும், அந்தப் பணம் நேரு குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், அமைச்சர் கே.என். நேருவின் துறையில் நடைபெறும் முறைகேடுகள், வாக்காளர் பட்டியல் நீக்கம், கூட்டணி அரசியல் மற்றும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு குறித்து எழுந்த சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அமைச்சர் கே.என். நேருவின் துறையில் தொடர் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஒப்பந்ததாரர்கள் கமிஷன் தொகையை நேரு குடும்பத்தினருக்கு வழங்கி வருவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக, பணம் கைமாறியது குறித்து 'பார்ட்டி பண்ட்' (Party Fund) எனக் குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் சாட்களை தாக்கல் செய்துள்ளார்.
பொறியாளர் தேர்வில் ₹885 கோடி ஊழல் நடந்துள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் ஊராட்சிச் செயலாளர் தேர்விலும் லஞ்சம் கைமாறி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும், அமலாக்கத்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யத் தயாராக இல்லை என்றும், வழக்குப்பதிவு செய்யாமல் அமலாக்கத்துறை வந்தால் சட்டச் சிக்கல் வரும் என்றும் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்யப்படாவிட்டால், நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!
முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றும், வெளிப்படையாக ஊழல் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார். இது மொத்த வாக்காளர்களில் 12.5% என்றும், இந்த நிலையில் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது அனைவரும் கவனமுடன் பார்க்க வேண்டும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தல் சுத்தமாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், நேர்மையாகத் தீர்ப்பளித்தால் இந்த நிலையா என்ற பயத்தை திமுக ஏற்படுத்தியுள்ளது (DMK Created Fear) என்றும் அவர் விமர்சித்தார். உத்தவ் தாக்கரே கட்சியும் கையெழுத்துப் போட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். கடுகு மட்டும்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தேவையில்லாத புரளிகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் விவசாயிகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குப் பதிலளித்தார்.
வலிமையான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகும் என்றும், பாமக, தேமுதிக இன்னும் கூட்டணியில் இணையவில்லை என்றும் தெரிவித்தார். கூட்டணி குறித்துத் தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும், அதிமுக வலிமை அடையப் பேசுவது அவர்களுடைய உரிமை என்றும், பாஜக எங்களுக்காகப் பேசுகிறது என்றும் அண்ணாமலை பதிலளித்தார்.
அதிமுக பொதுக்குழுவில் செங்கோட்டையன் பேசியது தவறாகத் தெரியவில்லை என்றும், அது வார்த்தைப் போரில் பேசியதாகப் பார்க்க வேண்டும் என்றும், அது ஒரு மூத்த தலைவர் பேசிய வார்த்தை என்றும் கூறி விவகாரத்தை அண்ணாமலை முடித்துவைத்தார். அமித்ஷா விரைவில் தமிழகம் வருவார் என்றும் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை முதலமைச்சரின் கடைசி அஸ்திரம் என்றும், ஆட்சிக்கு வந்து 17 மாதங்களுக்குரிய பாக்கியைச் சேர்த்து வழங்கினால் அது நல்லது என்றும் அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: தேசிய விருது பெற்ற தமிழக ஓவியர்: நட்சத்திர வடிவ ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் சிறப்பிப்பு!