×
 

பள்ளி மாணவர்களை ஓட ஓட வெட்ட துரத்தும் போதை ஆசாமிகள்... அண்ணாமலை அதிருப்தி..!

திருப்பூரில் பள்ளி மாணவர்களை போதை ஆசாமிகள் வெட்டுவதற்கு துரத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்

இளம் வயதினர் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வையே தொலைத்து விடுகின்றனர். சமீபத்தில் கஞ்சா புழக்கம் இளம் சிறார்கள் இடையேயும் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை கட்டுப்படுத்துவது சற்று கடினமான விஷயமாகவே உள்ளது. அதிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பழிக்குப் பழி வாங்குவதும் நம்மால் பார்க்க முடிகிறது.

தற்போது கஞ்சா போதையில் பள்ளி மாணவர்களிடம் இளைஞர்கள் சிலர் தகராறு செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை அதை பேசிக் கொண்டிருந்தபோதே ஒரு இளைஞர் பள்ளி மாணவனை கத்தியால் வெட்டுவதற்கு ஓட ஓட துரத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பகிர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அண்ணாமலை கூறினார். பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் நிலையில், தற்போது, பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அவல நிலையில் தமிழகம் இருப்பது வெட்கக்கேடு என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம்.. அண்ணாமலை தடாலடி..!

உடனடியாக, மாணவர்களை வெட்ட முயன்ற சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், பொது இடங்களில் போதையில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க, காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்றும் வலியுகுறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கழிவறையை சுத்தம் செய்யும் குழந்தைகள்.. சீரழியும் பள்ளிக்கல்வித்துறை! அண்ணாமலை கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share