“what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதிக்கும், உண்மையில் நடக்கும் சம்பவங்களும் வேறு வேறாக இருப்பதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடையதாக தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதிக்கும், உண்மையில் நடக்கும் சம்பவங்களும் வேறு வேறாக இருப்பதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
இதையும் படிங்க: அரசியல் என்ட்ரி கன்பார்ம் ஆனால்... மெகா ட்விஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்... வீடியோவில் பேசியது என்ன?
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
சென்னையை அடுத்த ஆலந்தூரில், கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வேம்புலி அந்தப் பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, அவர் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் வீட்டுக்குள் சென்று பாலியல் ரீதியாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைமை வேம்புலி மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் தலைமை உத்தரவின் பேரில், ஆலந்தூர் வடக்கு பகுதி கழகச் செயலாளராக பொறுப்பு வகித்த திரு. வேம்புலி அவர்கள், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், உடனடியாக (10.06.2026 முதல்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR P. சரவணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார், மேலும் இனி அவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் ரஜினி குடும்பத்திற்கு தொடர்பா..?? வெளியான முக்கிய தகவல்..!!