×
 

மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...

கையில் மைக்கை பிடித்துக் கொண்டு, வெள்ளைச் சட்டை போட்டு 4 ரீல்ஸ் போட்டால் தலைவன் ஆகிவிடுகின்றனர் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை உத்தண்டியில் உள்ள சுத்தானந்தா ஆசிரமத்தில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை பங்கேற்றார். இந்தப் பயிலரங்கில் பேசிய அண்ணாமலை, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பெரும்பாலான மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவு செய்கின்றனர் என்றும் இதனால் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். வருவோர் போவோர் எல்லாம் தலைவர் ஆகிவிடுகின்றனர் என கூறிய அவர், கையில் மைக்கை பிடித்துக் கொண்டு, வெள்ளைச் சட்டை போட்டு 4 ரீல்ஸ் போட்டால் தலைவன் ஆகிவிடுகின்றனர் என்றும் இதே தமிழகத்தில் தான் காமராஜர், கக்கன் போன்றவர்கள் தலைவர்களாக இருந்தார்கள்., உண்மையில் ஒரு நல்ல அரசியல் தலைவராக வர 2 தகுதிகள் முக்கியம் என தெரிவித்தார்.

சமூகம் பற்றிய உங்கள் பார்வை மற்றொன்று மனிதநேயம் என கூறினார். சாதி, மதம், சித்தாந்தத்தைக் கடந்து வெளியில் வர வேண்டும்.,அதன் பிறகே மக்கள் உங்களை அரசியல் தலைவராக ஏற்பார்கள் என தெரிவித்தார். மகாத்மா காந்தி 29 ஆண்டுகள் எந்தப் பதவியிலும் இல்லை என்றும் ஒரே ஒரு வருடம் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார் எனவும் கூறிய அண்ணாமலை, மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றத்தை முதலில் நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என கூறினார். எப்போதும் பதவியை எதிர்பார்க்காமல் கட்சியில் சேர வேண்டும் என்றும் பதவி வரும் போகும் ஆனால், எந்தப் பதவியாக இருந்தாலும் ஒருநாள் இல்லாமல் போகும். எனவே தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அஜித் மரண வடு மறைவதற்குள் மற்றொரு பகீர் சம்பவம்! இன்னும் எத்தனை சட்ட மீறல்கள்.. அண்ணாமலை கொந்தளிப்பு..!

இதையும் படிங்க: உணவுப்படியை உயர்த்தாத முதல்வருக்கு வெற்று விளம்பரம்.. அண்ணாமலை கடும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share