×
 

கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!

திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக மாறி உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.  கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சுற்றுப்பயணத்தின் போது மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் உள்ளது என்றும் திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது எனவும் தெரிவித்தார். மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கும் விஞ்ஞான தலைவர் ஸ்டாலின் என்றும் திமுக அரசு திட்டங்களை அறிவித்து குழுக்களை போடுவதோடு சரி செயல்படுத்துவதில்லை எனவும் குப்பைக்கு கூட வரி விதித்த ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றும் தெரிவித்தார். 

அடிமாட்டு விலைக்கு தராததால் திரைப்படங்களை வெளியிட முடியவில்லை என்றும் கூறினார். முதலமைச்சர்கள் ஸ்டாலின் கடன் வாங்குவதை சூப்பர் முதலமைச்சர் எனக் கூறிய அவர், 4 ஆண்டுகளில் திமுக அரசு 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது என்றும் டாஸ்மாக்கில் பாட்டலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கி 5,400 கோடி கொள்ளை அடித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். திமுக அரசு நிறுத்திய திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது என்றும் அதிமுக ஆட்சி - திமுக ஆட்சி விலைவாசி பட்டியலை பார்த்துவிட்டு மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் வீடு கட்டுவது என்பதே கனவாக மாறிவிட்டது., எம் சாண்ட், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விலை உயர்ந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா… இபிஎஸ்-ஐ கிண்டலடித்த ஸ்டாலின்..!

இதையும் படிங்க: களத்தில் முதல்வர்... வீடுவீடாகச் சென்று பிரச்சாரம்..! பரபரக்கும் திருவாரூர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share