கூண்டோடு காலியாகும் பாஜக... அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு...!
தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களுடன் உரையாடினார்.
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகும் அண்ணாமலையின் முடிவை தேசிய தலைமை ஏற்றது. அண்மையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கினார் அண்ணாமலை. பாஜகவில் இருந்து விலகியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று நண்பகல் 12மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களுடன் உரையாடினார்.
அப்போது பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிதாக கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளதாக அறிவித்த அவர், www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம் என்றும், ஆளும் கட்சி, எதிர்கட்சி இருந்தாலும் நாம் யாருக்கும் போட்டியில்லை என்றும் அறிவித்தார்.
நம் கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ இல்லை எனக்கூறிய அண்ணாமலை, ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது. எம்எல்ஏ, எம்பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.என்னோடு வருபவர்கள் பொறுமை, நிதானத்தோடு வர வேண்டும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!
அண்ணாமலையின் இந்த அறிவிப்பை அடுத்து இணையதள பக்கத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சில மணி நேரங்களிலேயே இணைய ஆரம்பித்துள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த அடுத்து தமிழ்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் மொத்தமாக பாஜகவில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் வேல் கண்ணன் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்று, நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகள் அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் நாளைய முதலமைச்சர் அண்ணாமலை என கோஷம் எழுப்பினர்.
அவர் எடுக்க முடிவுகள் அனைத்திற்கும் நாங்கள் துணை நிற்போம். பாஜகவில் இருந்து அவர் வழங்கியதால் நாங்களும் எங்கள் நிர்வாகிகள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகுவதாக அண்ணாமலை நற்பணி மன்ற மாநில தலைவர் வேல் கண்ணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!