அடக்கொடுமையே... அண்ணாமலையாருக்கே இப்படியொரு நிலையா?... கோயிலுக்குள் அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்!!
திருவண்ணாமலை கோயிலில் காலாவதியான பாலால் அபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் காலாவதியான பாலை பயன்படுத்தி அபிஷேகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு நடைபெறும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளில் அபிஷேகமும் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பிரதோஷம், பௌர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய நாட்களில் அண்ணாமலையார் மற்றும் கோயிலில் உள்ள நந்தி உள்ளிட்ட சன்னதிகளில் பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பிரதோஷ நாட்களில் பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி சன்னதிகளுக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது பதிவாகியுள்ளது. அதேபோல், பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும் அண்ணாமலையாருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவில் பிள்ளையாருக்கு தங்கக் கவசம்..! சம்பந்த விநாயகருக்கு விசேஷ பூஜைகள்..!!
இந்நிலையில், பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகத்திற்காக பக்தர்கள் வாங்கி வந்த பால், கடந்த 8ஆம் தேதியே காலாவதியாகியிருந்ததாகத் தெரிந்தும், கோவில் நிர்வாகத்தினர் அந்தப் பாலை கொண்டு அபிஷேகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கிழக்கு ராஜகோபுரம் அருகே உள்ள கடையில் காலாவதியான பால் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் பாலை பக்தர்கள் தீர்த்தமாகப் பருகும் நிலையில், காலாவதியான பாலை வைத்து அபிஷேகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “சில்லறையா கொண்டு வாங்க... ஜிபே கிடையாது...” - திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் கட் அண்ட் கறார் அறிவிப்பு...!