×
 

மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

அந்தியூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மண்ணெண்ணெய் கேனுடன் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கிய பெண்களால் பரபரப்பு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூணாஞ்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் கடந்த 15 நாட்களில் இன்று மூன்றாவது  முறையாக கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

 நண்பகள் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் மதுபான கடையை திறக்க விடாமல் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் கண்டன கோஷங்கள் எழுப்பிய வாரும் மண்ணெண்ணெய் கேனை கையில் பிடித்துக் கொண்டு கடையை திறந்தால் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொள்வோம் என கோஷங்களை எழுப்ப போராட்டத்தில் ஈடுபட்டனர்‌‌, தொடர்ந்து போலீசார் மண்ணெணய் கேனை வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள பெண்களிடம் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் நடத்தினர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவிக்கையில் மதுக்கடையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியதாகவும்,  பெண்கள் , சிறுவர்கள் அதிக அளவு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதாகும் எனவே இந்த கடை இங்கே இருக்க கூடாது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் ஆக்ஷன் MODE..! அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை..!!

தொடர்ந்து கடைக்கு பாதுகாப்பாக 20க்கு மேற்பட்ட போலீஸர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண்களை பேச்சு வார்த்தை நடந்த வருமாறு வருவாய்த்துறை அழைப்பு விடுத்தனர், அதுவரையிலும் கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

இதையும் படிங்க: எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share