×
 

"போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி"..! காவல் பதக்கங்கள் வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்..!

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் விஜய் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

முதலமைச்சர் விஜய் இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருள் மற்றும் புகையிலை இல்லாத வளாகம் எனும் முக்கிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, கல்வி நிறுவனங்களை போதைப் பொருட்கள் மற்றும் புகையிலைப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் புகையிலைப் பழக்கம் குறித்த கவலையை மனதில் கொண்டு, அரசு இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் மற்றும் புகையிலை விற்பனை அல்லது பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்படும் என்பதும், அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்பதும் இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சங்களாகும்.கல்வி நிறுவனங்களில் ஆன்டி ட்ரக் கிளப்களை அமைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்தப் பிரச்சாரம் விரிவாக்கப்பட உள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்தக் கிளப்கள் மூலம் போதைப் பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள், கலந்துரையாடல்கள் போன்றவை தொடர்ந்து நடத்தப்படும். மாணவர்களிடையே சுய ஒழுக்கத்தை வளர்ப்பதோடு, சக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும் இவை செயல்படும். இதன் மூலம் கல்வி வளாகங்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலாக மாறும் என்ற நம்பிக்கை அரசிடம் உள்ளது. மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் போதைப் பொருள் பரவலைத் தடுக்கும் நீண்டகால உத்தியாகவும் இது கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மாநில உரிமையை விட்டுத் தர கூடாது... தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்... கமல்ஹாசன் MP வரவேற்பு..!!

இதற்கிடையில், போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடற்கரை வழியான கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்க விருதுகளை வழங்கினார். கடலோரப் பகுதிகளில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, உற்பத்தி மையங்களை அழித்ததில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும். அரசு இந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, அவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களை வழங்கியது. இது போதைப் பொருள் ஒழிப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆறு தன்னார்வலர்கள் குழுவுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

இதையும் படிங்க: போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share