ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!".. அப்பாவு தாக்கு..!
முதல்வர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
தமிழகத்தின் தற்போதைய முதல்வரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனருமான விஜய் தனது கட்சிக்குள் மற்றும் தமிழக அரசியலில் சாதி, மத அடிப்படையிலான பிரிவினையை அனுமதிக்க மாட்டேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது அவரது அரசியல் பயணத்தின் மையக் கருத்தாகவே உள்ளது. 2024 பிப்ரவரியில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதே இந்த நிலைப்பாட்டை அவர் தெளிவாக வெளிப்படுத்தினார்.
TVK கட்சியைத் தொடங்கியபோது வெளியிட்ட அறிக்கையில் விஜய், “தற்போதைய அரசியல் சூழலில் நமது ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக உள்ளது நிர்வாகக் கோளாறுகள் மற்றும் ஊழல் அரசியல். மற்றொன்று சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் பிரிவினை அரசியல்” என்று குறிப்பிட்டார். தமிழக மக்கள் ஊழலற்ற, சாதி-மதமற்ற, தொலைநோக்கு கொண்ட நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சியின் கொள்கைகள் திருக்குறளின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு முதல்வர் விஜய்க்கு சாரமாறி கேள்விகளை முன் வைத்தார். ஜாதி, மத, ஊழலை ஒழித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் முதல்வரே மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் உங்கள் வேட்பாளர்கள் யார்?.. இதில் ஜாதி, மதம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். திருச்சி கிழக்கு வேட்பாளராக தாங்கள் போட்டியிட்டீர்கள். இதில் மதம் இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முழுவதும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை பார்த்தாலே தெரியும். இதில் ஜாதி, மதம் துளிர்விட்டு செழித்து வளர்ந்திருப்பது தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க: இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஆறே நாளில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை புஷ்பா பட பாணியில் சோபா செட் மூலம் தன்வசப்படுத்தி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சியை உடைத்து 25 சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்த தங்கள் செயல் ஜனநாயக படுகொலை இல்லையா என்றும் இதை யாரும் கேட்கக் கூடாதா? இதுதான் ஊழல் ஒழிப்பா? இது தூய எண்ணம் கொண்ட முதல்வர் செய்யும் செயலா? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: அதிர்ச்சி..! ராதாபுரம் தொகுதியில் அப்பாவு தோல்வி..! பூந்து விளையாடிய TVK..!