×
 

"விஜயின் தரம் தாழ்ந்த பேச்சு"..! சந்தி சிரிக்கும் சட்டமன்ற மாண்பு... அப்பாவு விமர்சனம்.!

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய விவகாரத்தை சுட்டிக்காட்டி அப்பாவு விமர்சனம் செய்தார்.

முன்னாள் சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தில் காவல்துறை மானிய விவாதத்தின்போது முதல்வர் அளித்த பதில்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மாணவ மாணவிகளை சீரழித்துவரும் போதைப்பொருள் கலாச்சாரத்தையும், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கடத்தி விற்பனை செய்யப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களையும் கட்டுப்படுத்த எந்தவித உறுதியான நடவடிக்கையும் குறிப்பிடாமல், இது நூறு நாட்களில் உருவானதல்ல, பல ஆண்டுகளாக வேரூன்றிய பிரச்சினை என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய பதில் கஞ்சா கடத்தலுக்கும் விற்பனைக்கும் துணைநிற்கும் செயலாகவே அமைந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான பதில் இல்லாமல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பொய்க் குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்ட சர்காரியா கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்தில் வாசித்தது வெட்கக்கேடான செயல் என அப்பாவு குறிப்பிட்டார்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியபோது அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், திமுக மேடைப் பேச்சுகளை எடுத்துக்கூறியது முதல்வரின் திறமையின்மையை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.அமைச்சரவையின் பெண் உறுப்பினர் ஒருவர் அலைபேசி மூலம் லட்சுமணன் என்பவரை ஜட்டியோடு உட்காரவைத்து அடித்துக் கொன்றுவிடுவேன் என மிரட்டிய சம்பவத்தையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாம் என அப்பாவு கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

தமிழ்நாட்டில் தவெக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபடும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் சீண்டல் போன்ற வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளிக்காமல், எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம் என்று அலட்சியமாகப் பேசியது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் விமர்சித்தார்.நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து எதுவும் பேசாமல், அண்டை மாநில உதவியாளர்கள் எழுதிக்கொடுத்ததை சினிமா அங்க அசைவுகளுடன் நடித்து வாசித்தது, பொதுக்கூட்டத்தில் நான்காம் தர மேடைப் பேச்சாளரைப் போல தரம் தாழ்ந்ததாக அமைந்துவிட்டது என அப்பாவு சுட்டிக்காட்டினார். இது சட்டமன்றத்தின் மாண்பையே சிரிக்க வைத்துவிட்டதாக அவர் கவலை தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share