வரும் 24ம் தேதி வரை சட்டசபை நடைபெறும்... எல்லாமே மரபுப்படி தான் நடக்குது...! அப்பாவு பேட்டி..!
வரும் 24ஆம் தேதி வரை சட்டசபை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வரும் 24ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார். 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 24 ஆம் தேதி ஆளுநர் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார். உரையில் இருப்பதை படியுங்கள் என ஆளுநரிடம் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார்.
நாளை மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். ஆளுநர் ஒரு அரசின் நிறை குறைகள் பற்றி பேசலாமா என்று கேள்வி எழுப்பிய அப்பாவு, ஆளுநருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாகவும், சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்ததாகவும், மிகவும் தாழ்ந்த குரலில் உரையை வாசிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுநர் ரவி அரசியல் பேசட்டும் என்று கூறினார்.
மரபுப்படி அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிப்பது ஆளுநரின் கடமை என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி நடந்து கொள்வார்களா என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் உரையை தான் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வாசிக்கிறார் என்றும் அப்படித்தான் சட்டப்பேரவையிலும் நடக்கும் எனவும் தெரிவித்தார். எந்த மரபையும் மீறவில்லை என்றும் சரியான மரியாதையான வார்த்தைகளால் மட்டுமே ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜி ராம் ஜி மூலம் ரூ. 5000 கோடி கூடுதல் செலவு... ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு..!
தான் பேசும் போது மற்றவர்களுக்கு தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக தான் ஆளுநரின் மைக் ஆப் செய்யப்பட்டது என்றும் இது மரபு தான் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் ஆளுநர் பேசும் போது அனைத்து மைக்குகளும் ஆப் செய்யப்படும் என்றும் தான் பேசும்போது ஆளுநர் உள்ளிட்டு ஒரு மைக் ஆப் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஜன.20ல் தமிழக சட்டப்பேரவை... ஆளுநர் மாண்பை காப்பார் என நம்புகிறோம்... சபாநாயகர் அப்பாவு பேட்டி..!