×
 

பாஜக பிடியில் முழுமையாக சிக்கிய அதிமுக..! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கிறார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கிறார்கள் என்று கூறினார். அதிமுக முழுமையாக பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான் என்றும் கூறினார். கடந்த முறையை விட அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் முன்னேறிய ஒரே ஒரு மாநிலத்தை காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். 30 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் சாலைகள் படுமோசமாக உள்ளன என்றார்.

இதையும் படிங்க: காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சியில் மிக திருப்தியாக உள்ளனர் என்று கூறியுள்ளார். காலை உணவுத் திட்டத்தை பஞ்சாபில் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறோம் என்று கூறினார். திமுக அரசு கல்விக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது என கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிக தொழில் முதலீட்டை தமிழ்நாடுதான் ஈர்த்துள்ளது. அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபடும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: புதுப்புது வித்தையால் கொள்ளையடிப்பவர் செந்தில் பாலாஜி..! திமுகவை பந்தாடிய EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share